பல்கலாச்சாரத்திற்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் நீங்கள் பெற விரும்பினால், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 131 450 என்ற இலக்கத்தில் தொலைபேசி ஊடான மொழிபெயர்த்துரைப்பு சேவையை அழைத்து (02) 6207 9432இல் ACT அரசுடன் இணைப்பை ஏற்படுத்துமாறு கேட்கலாம்.


ஆலோசனைக்குழு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவை மக்களைச் சென்றடைவதில் உதவுவதற்காகவும், ACTஇல் உள்ள சமூகக் குழுக்கள் மற்றும் பல கலாச்சார மற்றும் மொழியியல் குழுக்களின் தலைவர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.

நீங்கள் ஒரு குழு அல்லது அமைப்பில் அங்கம்வகிக்கிறீர்கள் என்றால், பல்கலாச்சாரத்திற்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழு தொடர்பாக உங்கள் சமூகத்தின் கருத்துக்களைப்பெறும்போது எம்மையும் அழைக்க விரும்பினால், 17 மார்ச் 2023க்குள் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

நீங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கும் எங்களால் வரமுடியும்.

எம்மைத் தொடர்பு கொள்ள நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: oma@act.gov.au